“நான் கேட்ட கார் வந்தா தான் தாலி கட்டுவேன்…” மண்டபத்திற்கு சாதாரண உடையில் வந்து மணமகன் போட்ட ஷாக்கிங் கண்டிஷன்.. கதறி அழுத மணப்பெண்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் கேட்ட கார் வந்தா தான் தாலி கட்டுவேன்…” மண்டபத்திற்கு சாதாரண உடையில் வந்து மணமகன் போட்ட ஷாக்கிங் கண்டிஷன்.. கதறி அழுத மணப்பெண்..!!

Published

on

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் எம்.ஏ படித்துவிட்டு பள்ளி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஹீனா என்ற இளம்பெண்ணுக்கு, காவல் அதிகாரியாக பணிபுரிந்து வரும் குல்தீப் என்பவருடன் 6 மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமணத்திற்கு வரதட்சணையாக கார் வேண்டுமென்று மணமகன் கூறியதையடுத்து, பெண்ணின் தந்தை முதலில் சுமார் ரூ. 9.5 லட்சம் மதிப்புள்ள மாருதி ஆரா காரை புக்கிங் செய்துள்ளார்; பின்னர் மணமகன் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள ப்ரீசா காரை விரும்புவதாகத் தெரியவந்ததால், ஆரா காரை ரத்து செய்துவிட்டு ப்ரீசா காரை புக்கிங் செய்துள்ளார்.

நவம்பர் 20 அன்று திருமணம் நடைபெற்றபோது, சாதாரண உடையில் தனது அம்மாவுடன் மண்டபத்திற்கு வந்த மணமகன், தான் கேட்ட ப்ரீசா கார் இருக்கிறதா என்று பார்த்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் கார் டெலிவரி செய்வதற்கு காலதாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார்; மாமனார் நடந்த விஷயத்தை எடுத்துக் கூறியும், கார் வந்தால் தான் தாலி கட்டுவேன் என பிடிவாதமாகக் கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

Advertisement

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் மணமகன் குல்தீப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்ட நகைகளை வாங்கிக் கொடுத்ததாகவும், சுமார் 1,500 விருந்தினர்களுக்கான உணவு ஏற்பாடுகள் உட்பட திருமணத்திற்காக சுமார் ரூ. 30 லட்சம் வரை செலவிட்டதாகவும் பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்; அனைத்தும் வீணாகிவிட்டதாகவும், மகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறிய அவர், மணமகன் காவல் அதிகாரியாக இருப்பதால் காவல்துறை சரியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in