“ராகுலுக்கு டீ, காபி வாங்கிக் கொடுத்துட்டு” விஜய் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் டிராவல் ஏஜெண்ட் தான் மாணிக்கம் தாகூர்… கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ராகுலுக்கு டீ, காபி வாங்கிக் கொடுத்துட்டு” விஜய் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் டிராவல் ஏஜெண்ட் தான் மாணிக்கம் தாகூர்… கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை…!

Published

on

தமிழக மக்களுக்குத் தலையில் உள்ள பேன் போல காங்கிரஸ் கட்சித் தொந்தரவு கொடுத்து வருவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற மாணிக்கம் தாகூர், 2019 மற்றும் 2024 தேர்தல்களில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்க ஏதாவது ஒரு கட்சியின் தயவு தேவைப்படுகிறது என்றும் அவர் சாடினார்.

மேலும், மாணிக்கம் தாகூரை நேரடியாக விமர்சித்த அண்ணாமலை, “அன்று தி.மு.க.வுடன் இருந்தவர்கள் இன்று த.வெ.க. பக்கம் செல்கிறார்கள்; ராகுல் காந்திக்கு டீ, காபி வாங்கிக் கொடுக்கவும், அவரை விஜய் வீட்டுக்கு அழைத்துச் செல்லவும் ஒரு ‘டிராவல் ஏஜெண்ட்’ போல மாணிக்கம் தாகூர் செயல்பட்டு வருகிறார்” எனக் கிண்டலாகப் பேசினார்.

Advertisement

தமிழக அரசியல் களத்தில் கூட்டணி மாற்றங்கள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் த.வெ.க. இடையிலான நகர்வுகளை முன்வைத்து அண்ணாமலை பேசியுள்ள இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in