ஏன் யோசிக்குறீங்க..? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனே கைது பண்ணுங்க… கொந்தளித்த முக ஸ்டாலின்… அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏன் யோசிக்குறீங்க..? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனே கைது பண்ணுங்க… கொந்தளித்த முக ஸ்டாலின்… அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனியும் சற்றும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏ-வை உடனடியாகக் கைது செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், ஆளும் தரப்பு தனது கட்சி எம்எல்ஏ-வையும், தனது மைனாரிட்டி அரசையும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் இந்தச் சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் இத்தகைய செயல்பாடுகளால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் தாமதமாகியுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in