“ஒன்றல்ல, இரண்டல்ல.. 15 பெண்கள்..” பணக்காரன் என நடித்து 4 மாநிலங்களில் 35 வயது காதல் மன்னன்செய்த பகீர் காரியம்..  நீதிமன்ற வாசலில் கதறி அழுத மனைவி.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒன்றல்ல, இரண்டல்ல.. 15 பெண்கள்..” பணக்காரன் என நடித்து 4 மாநிலங்களில் 35 வயது காதல் மன்னன்செய்த பகீர் காரியம்..  நீதிமன்ற வாசலில் கதறி அழுத மனைவி.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தன்னைப் பெரிய பணக்காரன் எனக் கூறிக்கொண்டு 15 பெண்களை அடுத்தடுத்துத் திருமணம் செய்து மோசடி செய்த 35 வயது நரேந்திர சர்மா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்ட நரேந்திரா, அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை அபகரித்துள்ளார். மேலும், அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றைக் காட்டிப் பெண்களைத் தொடர்ந்து மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல், மீரட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட நரேந்திரா, அவருடன் காசியாபாத்தில் வசித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் நரேந்திராவின் உண்மையான சுயரூபம் மற்றும் அவரது மோசடித் திருமணங்கள் குறித்து அப்பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், ஞாயிற்றுக்கிழமை நரேந்திராவை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட நரேந்திராவை போலீசார் காசியாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரால் ஏமாற்றப்பட்ட மீரட் பெண்ணும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இவன் என் வாழ்க்கையையே சீரழித்துவிட்டான். ஒன்றல்ல, இரண்டல்ல… மொத்தம் 15 பெண்களைத் திருமணம் செய்துள்ளான். தன்னைப் பெரிய பணக்காரன் எனக் காட்டிக்கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி, அவர்களின் மானத்தோடு விளையாடியுள்ளான்” எனக் கண்ணீருடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in