“குழம்பு காரமாக இருக்கு…” பாதி மயங்கிய நிலையிலும் மனைவியை மரக்கட்டையால் தாக்கிய சைக்கோ கணவன்.. போலீசார் கண்முன்னே விரட்டி விரட்டி அடித்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“குழம்பு காரமாக இருக்கு…” பாதி மயங்கிய நிலையிலும் மனைவியை மரக்கட்டையால் தாக்கிய சைக்கோ கணவன்.. போலீசார் கண்முன்னே விரட்டி விரட்டி அடித்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சமைத்த குழம்பு காரமாக இருந்ததாகக் கூறி மனைவியைத் தாக்கியதோடு, போலீசார் முன்னிலையிலேயே அவரை விரட்டி விரட்டி அடித்துத் தரதரவென இழுத்துச் சென்ற கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அருகே உள்ள கல்லல் சாத்தரசன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (33) என்பவரும், 27 வயதான செல்வராணி என்பவரும் காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், செல்வராணி சமைத்த குழம்பு காரமாக இருப்பதாகக் கூறி மணிகண்டன் அவரை மரக்கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த செல்வராணி, கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அமராவதிபுதூரில் தனது தாய் வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்று தங்கியுள்ளார்.

மனைவியைத் தேடிச் சென்ற மணிகண்டன், அவர் குழந்தைகளுடன் அமராவதிபுதூரில் இருப்பதை அறிந்து அங்கு சென்று தன்னோடு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், செல்வராணி அவருடன் செல்ல மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமநாதபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோர் மணிகண்டனைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

Advertisement

ஆனால், காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, அவர்கள் கண்முன்னே செல்வராணியை மணிகண்டன் கடுமையாகத் தாக்கி விரட்டி விரட்டி அடித்துள்ளார். மேலும், பாதி மயங்கிய நிலையில் இருந்த மனைவியைத் தரதரவென இழுத்துச் சென்றபடி “வரமாட்டியா..?” என மிரட்டியதும், செல்வராணி கண்ணீர் விட்டுக் கதறி அழுததும் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in