LATEST NEWS
BREAKING: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது.. சற்றுமுன் பரபரப்பு..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காகச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நெல்லையிலிருந்து திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட நயினார் நாகேந்திரனைத் தாழையூத்து என்ற இடத்தில் தடுத்து நிறுத்திய போலீசார், அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்
