“பாசிசத்தின் உச்சம்… உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்..” நயினார் நாகேந்திரன் வீட்டுக்காவல் விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாசிசத்தின் உச்சம்… உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்..” நயினார் நாகேந்திரன் வீட்டுக்காவல் விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்..!!

Published

on

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இல்லம் முன்பு காவல்துறையினரைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே இவ்வாறு முடக்குவது பாசிசத்தின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

காவல்துறையை ஏவிவிட்டு அரசு அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும், சட்டம் ஒழுங்கிற்கும் விடப்படும் அச்சுறுத்தலாகும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அடக்குமுறைகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

எனவே, உடனடியாக இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளைச் சட்டவிரோதமாக முடக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த ‘ஆச்சரியக்குறி’ அரசை வன்மையாகக் கண்டித்து வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in