“நாளை காலை திருப்பித் தந்துவிடுகிறேன்…” சொகுசு காரில் அழைத்துச் சென்று பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வாலிபர்.. FRND’ ஆப் மூலம் பழகிய 35 வயது இல்லத்தரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“நாளை காலை திருப்பித் தந்துவிடுகிறேன்…” சொகுசு காரில் அழைத்துச் சென்று பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வாலிபர்.. FRND’ ஆப் மூலம் பழகிய 35 வயது இல்லத்தரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!

Published

on

ஹைதராபாத்தில் ‘FRND’ செயலி மூலம் பழகிய 35 வயது இல்லத்தரசியிடம், தன்னை ஒரு கோடீஸ்வரன் என நம்பவைத்து தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் அல்லாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்வத் நகரில் வசிக்கும் 35 வயதுப் பெண்ணுக்கு, ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் குக்குனூர் மண்டலம் இப்ராகிம்பேட்டையைச் சேர்ந்த பேட்டா வசந்த் (25) என்ற இளைஞருடன் ‘FRND’ செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த வசந்த், தனது பணிமனைக்கு பழுதுபார்க்க வரும் விலையுயர்ந்த கார்களையும், பணக் கட்டுகளையும் வீடியோ காலில் காட்டி, தன்னை ஒரு பெரிய கோடீஸ்வரன் என அந்தப் பெண்ணை நம்பவைத்துள்ளார்.

வசந்த் உண்மையிலேயே கோடீஸ்வரன் என்று நம்பிய அந்த இல்லத்தரசி, அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வசந்த், அந்தப் பெண்ணை ஒரு விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்று ஊர் சுற்றிக் காட்டியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைக் கேட்ட வசந்த், அதனை மறுநாள் காலையில் திருப்பிக் கொடுத்து விடுவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அப்பெண்ணும் தனது தாலிச் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துள்ளார்.

Advertisement

ஆனால், நாட்கள் பல கடந்தும் வசந்திடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் அல்லாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடியில் ஈடுபட்ட பேட்டா வசந்தைக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த தாலிச் சங்கிலி, கார் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in