LATEST NEWS
“பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்… வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான முதல்வரைப் பார்த்ததில்லை” முதல்வர் விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்..!!
பெண் ஆட்சியருக்கு ஆபாசத் தகவல் அனுப்பியதாகக் கூறப்படும் அருள் விக்னேஷைக் காப்பாற்ற முயற்சித்த முதல்வர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்வதோடு, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு மோசமான முதல்வரைப் பார்த்ததில்லை என்றும் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
