LATEST NEWS
“கட்சியிலிருந்து நீக்குங்க” இரவோடு இரவாக அருள் விக்னேஷுக்கு தவெக தலைமை கொடுத்த அதிர்ச்சி.. கடும் கோபத்தில் விஜய்..!!
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரில் சிக்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தமிழக வெற்றிக் கழகத் தலைமை தயாராகி வருகிறது. இந்தச் சர்ச்சை தொடர்பாக, அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவது குறித்துத் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான அரசுக்கு இது பெரும் அவப்பெயரையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான இந்தச் சூழலைச் சமாளிக்கும் விதமாக, அரசின் முக்கிய அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்யைத் தொடர்பு கொண்டு, இந்தச் சர்ச்சையால் ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கங்கள் குறித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அப்போது, கட்சியின் நற்பெயருக்கும் ஆட்சியின் மாண்பிற்கும் களங்கம் விளைவிக்கும் செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அருள் விக்னேஷைக் கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவதோடு மட்டுமல்லாமல், சட்டரீதியாகவும் அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
