மக்களே உஷார்..! சந்தையில் உலவும் 324 தரமற்ற மற்றும் போலி மருந்துகள்… மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களே உஷார்..! சந்தையில் உலவும் 324 தரமற்ற மற்றும் போலி மருந்துகள்… மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Published

on

மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் அக்டோபர் மாதத்திற்கான மருந்து தர ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள மத்திய மருந்து ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 37 மருந்து மாதிரிகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு மாநில மருந்து பரிசோதனை ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 287 மருந்து மாதிரிகள் தரமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 324 மருந்து மாதிரிகள் உரிய தரக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யத் தவறியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி தரமற்ற மற்றும் போலி மருந்துகளைச் சந்தையிலிருந்து முழுமையாக அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in