CRIME
ஐயோ கடவுளே.. கண்முன்னே கருகிய திருமணக் கனவு.. மகளின் திருமணத்திற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்த ரூ.10 லட்சம் பணம், 4 சவரன் நகை… ஒரே நொடியில் எரிந்து சாம்பலான பரிதாபம்.. நடுரோட்டில் நின்று கதறும் குடும்பம்..!!
தெலுங்கானா நிர்மல் மாவட்டம் பசார் பகுதியில் உள்ள ரவீந்திரபூர் காலனியில் வசித்து வருபவர் இப்ராஹிம். இவர் தனது மகளின் திருமணத்திற்காகப் பல ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்தார். மேலும், திருமணத்திற்காகப் புதிதாக வாங்கப்பட்ட விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இப்ராஹிமின் வீட்டில் எதிர்பாராத விதமாக திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ மளமளவெனப் பரவியதில், வீட்டிலிருந்த ரூ.10 லட்சம் பணம் மற்றும் 4 சவரன் தங்க நகைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. இதுமட்டுமின்றி, திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டு ஆடைகள் மற்றும் மரச்சாமான்களும் தீயில் கருகி நாசமாயின.
மகளின் திருமணக் கனவோடு சேர்த்து வைத்திருந்த மொத்தச் சேமிப்பும் ஒரே நொடியில் கண்முன்னே எரிந்து சாம்பலானதைக் கண்டு இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களைக் கண்கலங்க வைத்துள்ளது. வாழ்வாதாரத்தையும் திருமணச் சேமிப்பையும் இழந்து நிர்கதியாக நிற்கும் அக்குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அக்கம்பக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
