கள்ளக்குறிச்சி வழக்கில் “CM விஜய்யையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்” ஏன் தெரியுமா..? உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கள்ளக்குறிச்சி வழக்கில் “CM விஜய்யையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்” ஏன் தெரியுமா..? உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி..!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இது தொடர்பாகப் புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான இந்தப் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் மாநில அரசு மெத்தனமாகச் செயல்படுவதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷைக் காப்பாற்றும் நோக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர் செயல்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் சமரசம் பேசும் விதமாகப் பேரம் பேசியதாகவும் உதயநிதி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளியைப் பாதுகாக்க முயன்ற முதலமைச்சர் விஜய்யையும், தலைமைச் செயலாளரையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் தனது செய்தியாளர் சந்திப்பில் கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisement

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கத் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் (POSH) கீழ் கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் நான்கு பேர் கொண்ட உள் புகார் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in