முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கு..? “அதை உட்கார்ந்து பார்ப்பது என் வேலை இல்லை” சற்றும் யோசிக்காமல் நடிகர் விஜய் சேதுபதிசொன்ன விஷயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கு..? “அதை உட்கார்ந்து பார்ப்பது என் வேலை இல்லை” சற்றும் யோசிக்காமல் நடிகர் விஜய் சேதுபதிசொன்ன விஷயம்..!!

Published

on

முதலமைச்சர் விஜய்யின் ஆட்சிச் செயல்பாடுகள் குறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிலளித்துள்ளார். விஜய் சாரைத் தனக்கு ஒரு நடிகராகத் தெரியும் என்றும், அவருடன் இணைந்து பணியாற்றியிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அரசியல் என்பது ஆட்சியாளர்கள் வகுக்கும் திட்டங்களும் அதனைச் செயல்படுத்துவதும்தான் எனத் தெரிவித்துள்ளார். தனக்கு நிறைய வேலைகள் இருப்பதால், அரசியலை உட்கார்ந்து கவனிப்பது தனது வேலை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அரசியல் கருத்துகளைப் பேசுவதில் தனக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, ஆனால் அத்தகைய கருத்துகளை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யாருக்கும் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அது எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் இதுவே யதார்த்தமாக இருப்பதாக அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement

ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதனைத் தொடர்ந்து கவனித்து வந்தால் மட்டுமே அது குறித்துப் பேச வேண்டும் என விஜய் சேதுபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் எந்தவொரு விவகாரத்தையும் முழுமையாகப் பின்தொடராமல் மேலோட்டமாகப் பொதுவான கருத்துகளைத் தெரிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in