LATEST NEWS
“அடேய் இது ரயிலா..? இல்ல கோவிலா..?” ஓடும் ஏசி ரயிலுக்குள் சத்தமாகச் சங்கு ஊதிய பயணி… உள்ளே சென்று பார்த்த சக பயணிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிக்குள் பயணி ஒருவர் விளக்கேற்றிப் பூஜை செய்து சங்கு ஊதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, சக பயணிகளின் பாதுகாப்பு குறித்துப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரல் வீடியோவில், ஓடிக்கொண்டிருக்கும் ஏசி ரயில் பெட்டிக்குள் அமர்ந்திருக்கும் பயணி ஒருவர், எவ்வித அச்சமுமின்றித் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவதும், பூஜை முடிந்ததும் சத்தமாகச் சங்கு ஊதுவதும் பதிவாகியுள்ளது. முழுமையாக மூடப்பட்ட ஏசி ரயில் பெட்டிக்குள் இவ்வாறு திறந்தநிலையில் நெருப்பைப் பயன்படுத்துவது சக பயணிகளின் உயிருக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயல் என இணையவாசிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்துத் தீவிர விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள ரயில்வே அதிகாரிகள், சம்பவம் நடந்த ரயிலின் எண், தேதி மற்றும் பயணியின் பி.என்.ஆர் (PNR) விவரங்களைப் பகிருமாறு கோரியுள்ளனர். ரயில்களுக்குள் நெருப்பைப் பயன்படுத்துவது மிகப்பெரிய தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ள ரயில்வே நிர்வாகம், இதுபோன்ற விதிமீறல்களைப் பயணிகள் கண்டால் உடனடியாக ‘ரயில் மதாத்’ (RailMadad) செயலி மூலமாகவோ அல்லது 139 என்ற உதவி எண்ணிலோ புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
