LATEST NEWS
AI மூலம் ஆபாச வீடியோ.. “சட்ட ரீதியாக விடமாட்டேன்!” தன்னை வக்கிரமாகச் சித்தரித்த கும்பலுக்கு மேயர் பிரியா பகிரங்க எச்சரிக்கை..!!
சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தன்னை வக்கிரமாகச் சித்தரித்து வீடியோக்களைப் பரப்பி வருவதாகச் சென்னை மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ச்சியாகத் தன் மீது இதுபோன்ற இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ள அவர், இது தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையுடன் தொடர்புடைய கும்பலின் திட்டமிட்ட தாக்குதல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசக் காணொளிகளைப் பரப்புபவர்கள் மீது நிச்சயம் சட்ட ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுப்பேன் என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
