CRIME
“பணத்தைக் கேட்டால் நெட்டில் போடுவேன்..” காதலியின் ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய 24 வயது வாலிபர்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
ஹைதராபாத் பேகம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாகப் பணிபுரிந்து வரும் ஒரு இளம் பெண், காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய வாலிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோடூரி கோபி (24) என்ற நபருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவர் உடலுறவு வைத்துள்ளார். இந்தச் சூழலில், தனது குடும்பக் கஷ்டத்தைக் கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளார் கோபி.
கடன் கொடுத்த அந்தப் பெண் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, கோபியின் நிஜ முகம் வெளிப்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த நெருக்கமான தருணங்களை ஆபாச வீடியோவாக எடுத்துத் தன்னிடம் வைத்துள்ளதாகவும், பணத்தைக் கேட்டால் அவற்றை இணையத்தில் பதிவேற்றிவிடுவேன் என்றும் கூறி அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். கோபியின் இந்தத் தொடர் மிரட்டலையும் மன உளைச்சலையும் தாங்க முடியாத அந்த இளம் பெண், இறுதியாகக் காவல்துறையிடம் தஞ்சம் புகுந்து புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட பேகம்பேட்டை போலீசார், கோபி மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
