CRIME
“அடச்சீ.. இவனெல்லாம் ஒரு புருஷனா..? 13 பேரு.. 20 வருஷம்.. 10 லட்சம் புகைப்படங்கள்.. மனைவியை மயக்க மருந்து கொடுத்து கொடுமைப்படுத்திய கொடூர கணவன்..!!
மனைவிக்கு போதை மருந்து கொடுத்து சுயநினைவிழக்கச் செய்து, 13 பேரைக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த கொடூர கணவனின் செயல் இங்கிலாந்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எந்த மனைவிக்கும் இப்படி நடக்கக் கூடாது என அனைவரும் பதைபதைக்கும் வகையில், சுமார் 20 ஆண்டுகளாக இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.
இதுமட்டுமின்றி, தனது மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அந்தக் கொடூரனின் செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் இருந்தது போலீஸாரையே திக்குமுக்காட வைத்துள்ளது.
