“கரண்ட் பில் அதிகமா? முதல்ல காசைக் கட்டுங்க!”.. சென்னை மக்களை அதிர வைக்கும் அந்த ஒரு திருப்பம் என்ன?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கரண்ட் பில் அதிகமா? முதல்ல காசைக் கட்டுங்க!”.. சென்னை மக்களை அதிர வைக்கும் அந்த ஒரு திருப்பம் என்ன?…

Published

on

சென்னையில் பல மின் நுகர்வோர்களுக்கு வழக்கத்தை விட அதிகமான மின் கட்டணம் வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்டர் ரீடிங் எடுப்பதில் ஏற்படும் கால தாமதம், சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கணினியில் தாமதமாகப் பதிவேற்றுவது, எண்ணிக்கையைத் தவறாகப் பதிவு செய்வது மற்றும் ரீடிங் எடுக்கப் போதுமான ஊழியர்கள் இல்லாதது ஆகிய நான்கு முக்கியக் காரணங்களால் இந்த உயர்வு ஏற்படுவதாக கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ரீடிங் எடுக்கும் ஊழியர்களின் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதால், கணக்கீடுகளில் குளறுபடிகள் ஏற்படுகின்றன. கட்டணம் அதிகமாக வரும்போது, தாமதமானால் அபராதம் விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நுகர்வோர் உடனடியாகப் பணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்; மேலும், மின்வாரிய அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

அதிகப்படியான கட்டணத்தைச் சரிசெய்ய, நுகர்வோர் மண்டல மின்வாரிய அதிகாரியை அணுகி ரீடிங் கணக்கீட்டையும் CMRI தரவையும் ஆய்வு செய்யக் கோரலாம். அவற்றில் வேறுபாடு இருந்தாலோ மீட்டரில் கோளாறு இருந்தாலோ மீண்டும் கணக்கிட வலியுறுத்தலாம்; CMRI தரவு வரும் வரை முந்தைய சராசரித் தொகையைச் செலுத்தலாம் என்றும், TNPDCL ஆய்வில் திருப்தி இல்லையெனில் மூன்றாம் தரப்பு மூலம் பரிசோதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in