மலையாள நடிகருடன் ஜோடி சேரும் ஜோதிகா….. அடுத்த திரைப்படம் இவருடனா….! வெளியான சூப்பர் தகவல்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மலையாள நடிகருடன் ஜோடி சேரும் ஜோதிகா….. அடுத்த திரைப்படம் இவருடனா….! வெளியான சூப்பர் தகவல்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டம் முதல் 20-ஆம் ஆண்டுகளிலும் கொடிகட்டி பறந்தவர் ஜோதிகா. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது . அஜித், விஜய், கமல், சூர்யா என்று பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாலத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சூர்யாவை காதலித்த இவர் அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். முதலில் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் பின்னர் பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு டாட்டா பாய் பாய் கூறினார் ஜோதிகா.

அதன் பிறகு இரண்டு குழந்தைகள், இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே என்ற படத்தின் மூலமாக மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த இவர் அதன் மூலமாக மீண்டும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நடிப்பு மட்டுமில்லாமல் சூரியாவுடன் இணைந்து 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நல்ல படங்களை தேர்வு செய்து தயாரித்து வருகின்றனர்.

Advertisement

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் உடன்பிறப்பு. இதைத்தொடர்ந்து எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார் ஜோதிகா. நல்ல திரைப்படத்திற்கு காத்திருந்த இவருக்கு தற்போது மலையாள படம் ஒன்று கிடைத்துள்ளது. மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் மம்பட்டி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் ஜோதிகா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஃபேமிலி டிராமா திரைப்படம். இந்த படத்தை Jeo Baby என்று இயக்குனர் இயக்க உள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in