LATEST NEWS
நண்பன் திரைப்படத்தில்….. விஜய்க்கு பதில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவர்தானாம்…. இருந்தாலும் படம் ஹிட்டுதான்….!!!
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் செல்லமாக இளைய தளபதி என்று அழைப்பார்கள். பிரபல இயக்குனரின் மகனாக இருந்த போதிலும் ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை சந்தித்தார் விஜய். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் கெரியரில் முக்கிய திரைப்படமாக அமைந்தது நண்பன்.
பிரபல இயக்குனர் சங்கரும், நடிகர் விஜய்யும் முதன் முதலாக இணைந்து வெளியான திரைப்படம் இது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்திருந்தார். மேலும் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிந்தியில் வெளியான த்ரீ இடியட்ஸ் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆக இந்த திரைப்படம் இருந்தது.
விஜயின் மாறுபட்ட நடிப்பு இந்த திரைப்படத்திற்கு முக்கிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் விஜய் நடித்த கொசசிவ் பசப்புகள் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தானாம். சில காரணங்களால் சூர்யாவால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு விஜயை வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
