பல வருட தொந்தரவு….”என் மனம் உடைந்து விட்டது”…. முதன்முறையாக மனம் திறந்து வருந்திய ராஷ்மிகா மந்தனா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பல வருட தொந்தரவு….”என் மனம் உடைந்து விட்டது”…. முதன்முறையாக மனம் திறந்து வருந்திய ராஷ்மிகா மந்தனா….!!!!

Published

on

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் எதிர்மறை விமர்சனம் மூலம் பலரும் என்னை தாக்குகிறார்கள்.உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பதால் நீங்கள் என்னை விமர்சிக்கலாம் என்று அர்த்தம் இல்லை. நான் பேச விரும்பாத விஷயங்கள் குறித்து மக்கள் என்னை விமர்சிப்பதால் மனம் உடைந்து விட்டதைப் போல உணர்கிறேன் என மிகுந்த வருத்தத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rashmika Mandanna இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rashmika_mandanna)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in