காதல் மனைவி ஷாலினி பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய அஜித்…. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் மனைவி ஷாலினி பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய அஜித்…. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிரியாத வரம் வேண்டும்.

பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார். இதனிடையே அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் நடிகை ஷாலினி பிறந்தநாள் பார்ட்டி நேற்று நடைபெற்றது.

Advertisement

அதனை அஜித் விமர்சையாக கொண்டாடியுள்ளார். அந்த பிறந்தநாள் விழாவில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் பார்ட்டியில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in