விஜய்யின் திரை பயணத்தில் முதல்முறையாக…. வாரிசு படம் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய்யின் திரை பயணத்தில் முதல்முறையாக…. வாரிசு படம் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தமிழ் திரையுலகின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்தும் ஓரளவு ஆக்சன் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.

Advertisement

இந்தத் திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் நேற்று தீ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விஜயின் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வாரிசு திரைப்படம் USAவில் 600 க்கும் அதிகமான லொகேஷன்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இது விஜயின் திரை பயணத்திலேயே மிகவும் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in