LATEST NEWS
மைனாவுக்கு மட்டும் பிக்பாஸில்…. லட்சம் லட்சமாய் சம்பளத்தை வாரி இறைக்கும் விஜய் டிவி….. எவ்வளவுன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!
விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
தற்போது மைனா நந்தினி தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். எப்போதும் நாம் நிகழ்ச்சியில் பார்க்கும் மைனா தற்போது பிக் பாஸ் வீட்டிலும் இருந்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வருவதற்கு மைனா நந்தினி வாங்கும் சம்பளம் குறித்த விவரத்தை பிக் பாஸ் வீட்டில் அவருடன் நெருக்கமாக பழகி வரும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
அதாவது மைனாவுக்கு ஒரு நாளுக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் தரப்படுவதாகவும் ஆனால் அவர் அந்த அளவுக்கு எதுவுமே வீட்டில் செய்யவில்லை எனவும் மணிகண்டன் கூறியுள்ளார். மைனா விற்கு மட்டும் விஜய் டிவி இவ்வளவு சம்பளம் கொடுக்கிறது என ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
