20 வயதில் இப்படியா?…. படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் நடிகை…. ஷாக் நியூஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

20 வயதில் இப்படியா?…. படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் நடிகை…. ஷாக் நியூஸ்….!!!!

Published

on

பாலிவுட் சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை துனிஷா ஷர்மா. இவர் பல்வேறு சீரியல்களில் நடைபெற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வாசை என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடையில் அதில் பணியாற்றிய நடிகை துனிஷா ஷர்மா நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான இவர் திடீரென தற்கொலை முடிவு எடுத்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் தற்கொலை வழக்கில் நடிகர் ஷீசன் முகமது கான் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படப்பிடிப்பின் போது பாத்ரூம் சென்று வருவதாக கூறிச் சென்ற நடிகை நீண்ட நேரம் ஆகியும் வராததால் அங்கு சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த பட குழுவினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் மட்டும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in