LATEST NEWS
திருமணத்திற்கு பிறகு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி புகழ் ரித்திகா…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரை காதலித்த மிக எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்த கையோடு மாலத்தீவுக்கு தனது கணவருடன் ஹனிமூன் சென்று இருந்தார் ரித்திகா.
அங்கு எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது வீடியோவுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். அதாவது மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் அவர் நடிக்க வந்து விட்டார். அவருக்கு பதில் வேறொருவர் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் படபிடிப்பு தளத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
