LATEST NEWS
முறைத்தபடி சினேகா வெளியிட்ட புகைப்படம்…. அந்த வார்த்தை சொல்லி பதிவு போட்ட பிரசன்னா…. வைரல்….!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கருத்துக்களை கூறி வந்தனர்.
இந்நிலையில் சினேகா கிறிஸ்டோபர் என்ற பயோபிக் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்தத் திரைப்படத்தில் முறைத்தபடி பிசியாக வேலை செய்யும் சினேகாவின் போஸ்டர் இணையத்தில் பகிரப்பட்டு உள்ளது. அதனைப் பார்த்த பிரசன்னா பார்க்க நன்றாக இருக்கிறது கண்ணம்மா என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். காதலிக்கும் போதில் இருந்து சினேகாவை பிரசன்னா கண்ணம்மா என்றுதான் அழைத்து வருகிறார். தற்போது இந்த லேட்டஸ்ட் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
