அடடே நடிகர் நாசரின் தம்பியா இது?…. அச்சு அசல் அவரைப் போலவே இருக்காரே…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே நடிகர் நாசரின் தம்பியா இது?…. அச்சு அசல் அவரைப் போலவே இருக்காரே…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் தான் நடிகர் நாசர். இவரின் நடிப்புக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு படங்களில் தனது நடிப்பின் திறமையை அபூர்வமாக வெளிப்படுத்தியவர்.  இவர் கடந்த வருடம் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வீரபாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ளனர்.

அதனைப் போலவே நாசருக்கு ஜவஹர் என்ற ஒரு தம்பியும் உள்ளார். அவரும் ஒரு நடிகர் தான் என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் பார்ப்பதற்கு அச்சு அசல் தன்னுடைய அண்ணன் நாசர் போலவே உள்ளார். ஜவகர் பனி விழும் மலர் வனம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில் அதன் பிறகு கடந்த வருடம் நேரடியாக ஓடிடியில் வெளியான ஜீவி 2 திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in