LATEST NEWS
நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து?…. உண்மையைக் கூறி சினிமா பிரபலம் போட்ட ட்விட்…. வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன.
சமீபகாலமாக விஜய் மற்றும் சங்கீதா இடையே பிரச்சனை உள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாகவும் பல வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விநியோகஸ்தர் கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவாகரத்து செய்தியை முற்றிலும் பொய் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.அது முழுக்க முழுக்க பொய்.
ரசிகர் சண்டை என்பது வேறு.
அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம். pic.twitter.com/59v69dLuYX— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) January 24, 2023
