LATEST NEWS
இயக்குனர் ஹரியின் 3 மகன்கள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…..!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இயக்குனர் ஹரி. பல கமர்சியல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஹரி இயக்குனர் பாலசந்தரிடம் கல்கி திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார்.
அதன் பிறகு இயக்குனர் சரண் இயக்கத்தில் அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பிறகுதான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் முதன்முதலாக தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான யானை திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் ஹரி தனது மனைவி,மகர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் ஹரியின் மகன்கள் மூன்று பேரும் நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
