முகத்தில் துளி மேக்கப் இல்லாமல் மகனுடன் சேர்ந்து…. வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனா…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

முகத்தில் துளி மேக்கப் இல்லாமல் மகனுடன் சேர்ந்து…. வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனா…!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதில் நாளுக்கு நாள் நடைபெறும் சண்டைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்க்கும் போது மனம் நெகிழ செய்கிறது. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா.

Advertisement

இவர் நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார். அதாவது ஷாப்பிங் செய்வது, வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் ஹோட்டலுக்கு செல்வது என அனைத்து விஷயங்களையும் அதில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

அவ்வகையில் தற்போது ஹேமா தனது மகனுடன் சுத்தமாக மேக்கப் இல்லாமல் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வர அதனை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் நன்றாக தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

hema akka huge fan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hemaakkahuge)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in