LATEST NEWS
“இதுதான் எனக்கு முக்கியம்”…. இது இல்லனா கோடீஸ்வரனா இருந்தாலும் வேண்டாம்…. நடிகை தர்ஷா குப்தா ஓபன் டாக்….!!
சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.
அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்வது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தர்ஷா குப்தா தன்னுடைய காதல் பிரேக் அப் பற்றி கூறியிருந்தார். தான் பிரேக் அப் செய்த காதலன் தற்போது வரை தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக கூறினார். மேலும் நம்பிக்கை தான் முக்கியம், ஒருமுறை அது போய்விட்டால் அவ்வளவு தான், trust இல்லை என்றால் கோடீஸ்வரனாக இருந்தால் கூட எனக்கு வேண்டாம், குடிசையில் கூல் குடித்தாலும் பரவாயில்லை உண்மையாக இருக்க வேண்டும் என்று தர்ஷா குப்தா கூறியுள்ளார்.
