VIDEOS
“இவரை இப்படி பார்த்ததே இல்லை”…. ரசிகர் முன்பு கண்ணீர் விட்டு அழுத நடிகர் அஜித்…. வைரல் வீடியோ…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கம் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ள நிலையில் லைகா நிறுவனம் முதல் முறையாக திரைப்படத்தின் மூலம் அஜித் உடன் கைகோர்த்துள்ளது.
இந்த திரைப்படம் குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் ஆனால் என்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் நடிப்பையும் தாண்டி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, துப்பாக்கி சுடுவது மற்றும் கார் ரேஸ் என அனைத்திலும் கலந்து கொண்டு வருகிறார் நடிகர் அஜித்.
இவர் பைக் ரைடிங் செல்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். துணிவு படப்பிடிப்பிற்கு இடையே இமயமலை பகுதிக்கு பைக் ரைடு சென்று இருந்தார். தற்போது அவர் நேபாளம் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது தனது ரசிகர் ஒருவரை சந்தித்தபோது அஜித் தன்னை மறந்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் அஜித்தை இப்படி பார்த்ததே இல்லை என உருக்கமாக கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
https://twitter.com/aalakx/status/1654072265217040384
