VIDEOS
மனதை கலங்க வைக்கும் மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்… வீடியோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் மனோபாலா. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக அவரின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர்தான் மனோபாலா.
அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார். 69 வயதாகும் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டது.
அதன் பிறகு திரை பணிகளை கவனித்து வந்த மனோபாலா கல்லீரல் பாதிப்பால் கடந்த 15 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் மனோபாலா தனது வீட்டில் காலமானார். அவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் மனோபாலாவின் இறுதி நிமிடங்களை தற்போது அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். அதில் மனோபாலாவின் மகன் அப்பாவை தேடுவதற்காக பாட்டு பாடி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
