கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற நடிகை சீதா…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற நடிகை சீதா…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் பார்த்திபன்.

இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன.

Advertisement

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் கடந்த வருடம் இயக்கிநடித்த ஒத்த செருப்பு திரைப்படம் மக்களின் மனதை வெகுவாக வென்று நல்ல ஹிட் கொடுத்தது.

Advertisement

சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை உலகின் முதல் சிங்கிள் சார்ட் திரைப்படமாக எடுத்து இயக்குனர் பார்த்திபன் மிகப்பெரிய சாதனையைப் படைத்தார்.

இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisement

அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது.

கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

Advertisement

மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

Advertisement

அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார் பார்த்திபன். இதனிடையே கொஞ்சம் காலமாக சீரியலில் தலை காட்டி வந்த சீதா தற்போது அதிக கவர்ச்சியாக மாறி அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

அதே சமயம் தனியாக வீட்டில் தோட்டம் வைத்துள்ள அவர் அது தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் நடிகை சீதா தனது அம்மாவுடன் சேர்ந்து குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளார்.

Advertisement

தனது அம்மா மற்றும் குடும்பத்துடன் சேர்ந்துகிராமத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in