VIDEOS
விபத்திற்குப் பிறகு முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ஆண்டனி…. வெளியான வீடியோ…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இதனிடையே சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆப்பரேஷன் எல்லாம் நடைபெற்றது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைமைக்கு அவர் திரும்பி உள்ளார்.
விபத்திற்கு பிறகு ஓய்வில் இருந்து வந்த அவர் தற்போது நலமாக பட விழாக்களில் கலந்து கொண்டு வரும் நிலையில் விபத்திற்கு பிறகு முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அவர் வந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
