VIDEOS
Dj Black-க்கு விரைவில் டும் டும்…. மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட Vj பிரியங்கா….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரபலம்தான். அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இன்று சினிமாவில் நுழைந்துள்ள பிரபலங்கள் பலரும் உள்ளனர். பல இளம் கலைஞர்கள் சினிமா ஜொலிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது பெரியவர்களுக்கான ஒன்பதாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் DJ Black. ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத் முதல் பல பிரபலங்கள் அவரது வேலையை பாராட்டியுள்ளனர். அண்மையில் அவரின் வேலையை பாராட்டி விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறப்பு விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா DJ Black- க்கு கல்யாணம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திருமண கோலத்தில் மணமேடையில் அமர்ந்துள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே திருமணம் கூடி விட்டதா என கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
