LATEST NEWS
நடிகர் சர்வானந்த் – ரக்ஷிதா ஜோடியின் திருமண தேதி எப்போது தெரியுமா?… வெளியான தகவல்…!!!
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் சர்வானந்த். தமிழில் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்தாலும் சரியான வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் தெலுங்கில் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து வெற்றி கொடுத்து வருகின்றார். இவர் இறுதியாக கணம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் தன்னுடைய 35-வது திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவருக்கும் ரக்ஷிதா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
அதன் பிறகு இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இவர்களின் திருமணம் வருகின்ற ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூரில் உள்ள leela palace இல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
