LATEST NEWS
புதிய லுக்கில் கலக்கும் நடிகர் லெஜெண்ட் சரவணன்…. போட்டோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்…!!!
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சரவணன் அருள்.தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார்.தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா மற்றும் தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை வைத்து அவர்களுடன் இணைந்து நடித்த விளம்பரம் எடுத்தார்.
அதனால் பலரும் இவரை கேலி செய்து வந்தனர். அதற்கெல்லாம் செவி சாய்க்காத சரவணன் அடுத்த கட்டமாக படங்களின் நடிக்கும் ஆசையை நிறைவேற்றினார். அதன்படி தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்தார். ஜேடி ஜெர்ரி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் விஜயின் லியோ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பல செய்திகள் வெளியானது. தற்போது புதிய படத்திற்காக வித்தியாசமான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
