VIDEOS
அழகில் அம்மாவையே மிஞ்சும் ரம்பாவின் மகள்… பள்ளியில் பட்டம் வாங்கிய வீடியோ வைரல்..!!
இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது ரம்பா குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகின்றார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ரம்பா தன்னுடைய மகளின் பள்ளி Graduation day விழாவில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரம்பாவின் மகள் அம்மாவின் உயரத்திற்கு வளர்ந்து விட்டாரே எனக் கூறி ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/CtfuGRig_oJ/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
