LATEST NEWS
மனைவி, மகள் அம்மாவுடன் பிறந்த நாளை கொண்டாடிய விஜய் டிவி TSK… வெளியான அழகிய புகைப்படங்கள்…!!
தமிழ் சின்னத்திரையில் தற்போது கலக்கி கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். இன்று அவர்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
அப்படி தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் TSK என்கிற திருச்சி சரவண குமார். இவர் மற்றும் அசார் இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவை காண்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது.
இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு சீசன் 8-ல் கலந்துகொண்டு கோப்பையை தட்டி சென்றார்.
திருச்சியை சேர்ந்த இவர் காந்தி கணக்கு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதனைப் போலவே ஆதித்யா, கலைஞர் டிவி மற்றும் மக்கள் டிவிகளிலும் இவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
சரவணக்குமார் என்ற பெயரில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக வலம் வந்தவர் தான் இவர். தற்போது தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராகவும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ஹிந்தியில் வெளியான பார்சி வெப் சீரிசில் விஜய் சேதுபதிக்கு இவர்தான் டப்பிங் கொடுத்திருந்தார்.
அமேசான் பிரைமில் வெளியான இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதில் விஜய் சேதுபதிக்கு அச்சு அசலாக அவரைப் போலவே TSK டப்பிங் கொடுத்து கலக்கி இருந்தார்.
அதே சமயம் ரியாலிட்டி ஷோக்கலில் விஜய் சேதுபதியின் வாய்ஸில் பேசி ரசிகர்களை இவர் மெய்மறக்க வைத்தவர்.
தற்போது தமிழ் சினிமாவில் பிசியான மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் வைஷ்ணவி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய பிறந்தநாளை மகள், மனைவி மற்றும் அம்மா என குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
