LATEST NEWS
திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகு அப்பாவான நடிகர் ராம்சரண்… என்ன குழந்தை தெரியுமா?… குவியும் வாழ்த்துக்கள்..!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே ராம்சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் பத்து வருடம் கழித்து ராம் சரண் மனைவி கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரின் வளைகாப்பு விழா நடந்த புகைப்படங்களும் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ராம்சரண் மற்றும் உபசனா ஜோடிக்கு இன்று அதிகாலை அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
