CRIME
“வெறும் லைக்ஸ் வாங்க இப்படியா..?” மலை ஏறிய 2 பெண்கள்.. கன்டென்ட் எடுக்கப்போய் நேர்ந்த கொடூரம்.. நடுக்காட்டில் உயிருக்குப் போராடிய பகீர் பின்னணி..!!
இந்தோனேசியாவின் வோனோசோபோவில் உள்ள கெம்பாங் மலையில், சமூக ஊடகங்களுக்காக கன்டென்ட் எடுக்க நினைத்த இரண்டு பெண் மலையேற்றப் பயணிகள், போதிய குளிர்கால ஆடைகள் இன்றி கடுமையான தாழ்வெப்பநிலை பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மலையேறுவது என்பது வெறும் பேஷன் அல்லது சமூக ஊடக டிரெண்டுகளுக்கானது மட்டுமல்ல, அதற்கு முறையான உபகரணங்கள் மற்றும் தயாரிப்புகள் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. குளிரைத் தாங்கும் ஜாக்கெட்டுகள் கூட இல்லாமல் மலைக்குச் சென்ற இந்த இரு பெண்களும் குளிரில் நடுங்கி ஆபத்தான நிலையை அடைந்ததை அடுத்து, லெங்கோங் மீட்புக்குழுவைச் சேர்ந்த எட்டு வீரர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.
மீட்புப் பணியின் போது, கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்களின் ஆடைகளை மாற்றிய மீட்புக் குழுவினர், அவர்களின் உடலில் இருந்து வெப்பம் மேலும் குறைவதைத் தடுக்க அலுமினியத்தால் ஆன அவசரக்கால போர்வைகளால் உடலைப் போர்த்திப் பாதுகாத்தனர். அதன் பின்னர், இருவரும் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் மலையிலிருந்து பாதுகாப்பாகக் கீழே கொண்டு வரப்பட்டனர். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாகசம் என்ற பெயரில் கன்டென்ட் செய்ய நினைத்து, இறுதியில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
