கூரையைப் பிச்சுட்டு வந்த அதிர்ஷ்டம்..! வெறும் ₹200 ரூபாய்க்கு ₹50 லட்சம் மதிப்பில் கிடைத்த பிரம்மாண்ட ஃபார்ச்சூனர் கார்… எல்லாத்துக்கும் பாட்டி தான் காரணமாம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கூரையைப் பிச்சுட்டு வந்த அதிர்ஷ்டம்..! வெறும் ₹200 ரூபாய்க்கு ₹50 லட்சம் மதிப்பில் கிடைத்த பிரம்மாண்ட ஃபார்ச்சூனர் கார்… எல்லாத்துக்கும் பாட்டி தான் காரணமாம்..!!

Published

on

வெறும் 200 ரூபாய் மதிப்பிலான குலுக்கல் சீட்டிற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாகக் கிடைத்தால், அந்த அதிர்ச்சி கலந்த ஆனந்தத்திற்கு எல்லையே இருக்காது. அப்படியொரு அசாத்தியமான அதிர்ஷ்டமும் எல்லையற்ற மகிழ்ச்சியும் தான் மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்த மாதனேஷ் ராய்க்வார் என்ற 6 வயது சிறுவனின் குடும்பத்திற்குத் தற்போது கிடைத்துள்ளது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு நடைபெற்ற நவராத்திரி கர்பா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, இந்தச் சிறுவனின் பாட்டி வெறும் 200 ரூபாய் கொடுத்து ஒரு குலுக்கல் சீட்டை வாங்கியுள்ளார். தங்களது பேரக் குழந்தையின் பெயரான மாதனேஷ் ராய்க்வார் என்ற பெயரிலேயே அவர் அந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது நடத்தப்பட்ட அந்த அதிர்ஷ்டக் குலுக்கலின் முடிவில், அந்தச் சிறுவனின் பெயருக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய பிரம்மாண்டமான ‘டொயோட்டா ஃபார்ச்சூனர்’ (Toyota Fortuner) கார் முதல் பரிசாக விழுந்துள்ளது. 200 ரூபாய் சீட்டிற்கு ஃபார்ச்சூனர் கார் பரிசாகக் கிடைத்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீ போலப் பரவி பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in