#image_title

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருக்கும் பிரியதர்ஷன் மகள் தான் இவர். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கல்யாணி நுழைந்தார்.

அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மாநாடு திரைப்படத்தில் நடித்த அசத்தியிருந்தார். அந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த அவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் கல்யாணி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் பிரியதர்ஷினி மகனும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அண்ணனுமான சித்தார்த்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.