LATEST NEWS
“கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஜந்தர் மந்தர் பக்கம் வாங்க..!” இண்டிகோ விமானத்தில் சி.ஜே.பி போராட்டத்திற்கு ஆதரவு கேட்ட பயணி..! வைரல் வீடியோ..!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு கோரி, இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் சக பயணிகளிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி நோக்கிச் சென்ற அந்த விமானத்தின் நடுப்பாதையில் நின்று அக்ஷய் சோனாவானே என்பவர், டெல்லியில் நடக்கும் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
அந்த வீடியோவில் பேசிய அவர், “டெல்லியில் நடைபெறும் அமைதிப் போராட்டத்திற்காக வருகை தரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்களுக்குத் தங்குமிடம், போக்குவரத்து அல்லது மனரீதியான ஆதரவு எது தேவைப்பட்டாலும் உதவ நாங்கள் தயார்” எனக் குறிப்பிடுகிறார். மேலும், “டெல்லிக்கு வரும் பயணிகள் அனைவரும் சிறிது நேரம் ஒதுக்கி ஜந்தர் மந்தருக்கு வந்து இந்த அமைதியான போராட்டத்திற்கு ஆதரவளித்து, நாட்டின் நலனுக்குத் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
https://www.instagram.com/reel/Da_5wcCJcsY/?utm_source=ig_web_button_share_sheet
விமானத்தில் நிறைந்திருந்த பயணிகளுக்கு மத்தியில் எந்தவிதத் தயக்கமும் இன்றித் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் பேசிய அந்த நபருக்குச் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. “நாட்டிற்காகப் பேசும்போது சமூகக் கூச்சம் தேவையில்லை” என்ற வரிகளுடன் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், அவரது முயற்சியையும் தன்னம்பிக்கையையும் வெகுவாகப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
