“அடக்கடவுளே..! 6-வது மாடியில் இருந்து 2 வயது குழந்தையைத் தள்ளிய சிறுமி..” மகளை காப்பாற்ற சிசிடிவி காட்சிகளை அழித்த தாய்.. நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே..! 6-வது மாடியில் இருந்து 2 வயது குழந்தையைத் தள்ளிய சிறுமி..” மகளை காப்பாற்ற சிசிடிவி காட்சிகளை அழித்த தாய்.. நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!

Published

on

மும்பை கோரேகான் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து, இரண்டு வயது சிறுமியை 12 வயது சிறுமி சமானா கீழே தள்ளிவிட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சோகச் சம்பவத்திற்குப் பிறகு, எத்தகைய குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சமானா மிகவும் சாதாரணமாகச் சைக்கிள் ஓட்டிச் சென்றது காண்போரை உலுக்கியுள்ளது.

இந்தக் கோரச் சம்பவத்திற்குப் பிறகு, குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்கில் சிறுமியின் தாயும் ஆசிரியையுமான நபர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைத் திட்டமிட்டு அழித்துள்ளார். இருப்பினும், காவல்துறையின் சைபர் நிபுணர்கள் தீவிர முயற்சி செய்து அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெற்றிகரமாக மீட்டதுடன், உண்மையான குற்றப் பின்னணியையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

Advertisement

சாட்சியங்களை மறைக்க முயன்றதுடன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அந்த ஆசிரியையான தாயும், குற்றத்தில் ஈடுபட்ட 12 வயது சிறுமி சமானாவும் தற்போது காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in