“கணவனைத் தீர்த்துக்கட்ட பாம்பை வைத்தே அரங்கேற்றிய கொடூர நாடகம்..! காதலனுடன் சேர்ந்து மனைவியும் செய்த அதிர்ச்சி செயல்..” நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“கணவனைத் தீர்த்துக்கட்ட பாம்பை வைத்தே அரங்கேற்றிய கொடூர நாடகம்..! காதலனுடன் சேர்ந்து மனைவியும் செய்த அதிர்ச்சி செயல்..” நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

Published

on

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்த அதிர்ச்சியூட்டும் ‘பாம்பு கொலை வழக்கில்’, கணவன் அமித்தைக் கொன்றுவிட்டு அதனை பாம்பு கடித்தது போல் நாடகமாடிய மனைவி ரவிதா மற்றும் அவரது காதலன் அமர்தீப் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அமித்துடன் டைல்ஸ் வேலை செய்து வந்த அமர்தீப், வேலை விஷயமாக அடிக்கடி அமித்தின் வீட்டிற்குச் சென்று வந்தபோது ரவிதாவிற்கும் அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமித்திற்குத் தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் மோதல்களும் நடந்து வந்துள்ளன.

சம்பவத்தன்று அமித்தை வீட்டிலேயே கழுத்தை நெரித்துக் கொன்ற இருவரும், போலீசாரை ஏமாற்றுவதற்காக உடலுக்கு அருகில் ஒரு பாம்பைக் கொண்டு வந்து வைத்துவிட்டு இது பாம்பு கடித்து இறந்த இயற்கை மரணம் என்று நம்ப வைக்க நாடகமாடியுள்ளனர்.

Advertisement

ஆனால், அமித்தின் உடல் கிடந்த விதம் மற்றும் அவரது உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள், ரவிதாவின் கடும் எதிர்ப்பையும் மீறி போலீஸ் உதவியுடன் உடற்கூராய்வு செய்ய வைத்தனர். அந்த சோதனையில் அமித் பாம்பு கடித்துச் சாகவில்லை, மாறாகக் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற உண்மையும், கொலையாளிகள் திட்டமிட்டே இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதும் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in