கல்யாணம் பண்ணப்ப ஒண்ணுமே இல்ல.. அதனால இப்போ அதோட அருமை எங்களுக்கு தெரியும்.. நடிகர் ரியாஸ்கான் ஓபன் டாக்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

கல்யாணம் பண்ணப்ப ஒண்ணுமே இல்ல.. அதனால இப்போ அதோட அருமை எங்களுக்கு தெரியும்.. நடிகர் ரியாஸ்கான் ஓபன் டாக்..!!

Published

on

மலையாளத் திரை உலகில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரியாஸ்கான். இவர் பிரபல தயாரிப்பாளர் ரஷீத் அவர்களின் மகன். முதலில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் மலையாளத்தில் தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அதாவது பத்ரி, வின்னர், மாயி, சமுத்திரம் மற்றும் ஆளவந்தான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதனைப் போலவே சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்துள்ள நிலையில் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் அவர்களது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இருவரும் திருமணம் செய்த காலத்தில் வேலையும் இல்லை பணமும் இல்லை.

பணத்தைக் குறித்த கேள்விகளுக்கு இருவருமே, பணமே இல்லாம இருந்து இருக்கும் அதனால பணத்தோடு அருமை எங்களுக்கு தெரியும் என்று பல பேட்டிகளில் ஒன்றாக கூறியுள்ளனர். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.